இதயத்தை எடுத்துச்சென்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து
ஜப்பானில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு இதயத்தை எடுத்து சென்ற ஹெலிகாப்டர் வயலில் விழுந்து விபத்துக்குள்ளானது. புகிஷமாவில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயத்தை எடுத்து மற்றொருவருக்கு பொருத்திக் கொள்ள குடும்பத்தினர் சம்மதம் அளித்தனர்.
அதை தொடர்ந்து அவரது இதயத்தை அகற்றி டோக்கியோ பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒருவருக்கு பொருத்த திட்டமிடப்பட்டது. மருத்துவர்கள் அவரது இதயத்தை விரைவாக கொண்டு சேர்ப்பதற்காக காவல்துறையின் ஹெலிகாப்டரை எடுத்துச்சென்றனர்.
எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் விழுந்ததும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




