மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு

தற்போது உள்ள சூழலில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் தொடர்ந்து சரிந்து கொண்டே இருக்கிறது.நேற்று முன்தினம் நீர்வரத்து 187 கன அடியாக இருந்த நிலையில், நேற்று 182 கன அடியாக மாறி இருந்தது.

 

அதிகாலையில் 177.5 அடியாக உள்ளது.ஏற்கனவே டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு திறந்துவிட்டு தற்போது மூடியுள்ள நிலையில்,குடிநீர் தேவைக்காக மட்டுமே தற்போது திறக்கப்படுகிறது.வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

 

அணையின் நீர் இருப்பு 74 டிஎம்சி ஆக உள்ளது.தொடர்ந்து நாளுக்கு நாள் நீர் இருப்பு குறைந்து கொண்டே போகும் சூழலில்,கோடை காலங்களில் முற்றிலுமாக அணையை வறண்டு போகும் நிலை காணப்படும் என்று தெரிகிறது.


Leave a Reply