தமிழகத்தையே உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

 

11 மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை கடந்த டிசம்பரில் நிறைவு பெற்ற நிலையில் இன்று போக்சோ நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா தீர்ப்பளிக்க உள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

 

இதுதொடர்பாக குடியிருப்பில் பணிசெய்த லிப்ட் ஆபரேட்டர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பாபு என்பவர் சிறையிலேயே உயிரிழந்த நிலையில் மற்ற 16 பேருக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.


Leave a Reply