--- --:--:-- --

உ.பி: 23 குழந்தைகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தவர் சுட்டுக்கொலை

2

உத்திரபிரதேசத்தில் 23 குழந்தைகளை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த நபரை சுட்டு வீழ்த்திய காவல்துறையினர் குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். பருகாபாத் மாவட்டம் கசாரியா கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் பாதன். ஒரு கொலை வழக்கில் சிறை சென்ற சுபாஷ் பாதன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

 

நேற்று தனது மகளின் பிறந்தநாள் விழா என்று கூறி கிராமத்தினரை வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன்படி மாலையில் பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்த 15 வயதிற்குட்பட்ட 23 குழந்தைகளை துப்பாக்கிமுனையில் வீட்டிலேயே சிறைப்பிடித்தான் சுபாஷ் பாதன். இதனை அறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு சென்று அவரை சமாதானப்படுத்த முற்பட்டனர்.

 

ஆனால் காவல் துறையினரை பார்த்த உடனே அவர்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார் சுபாஷ் பாதன். இதிலிருந்து காவலர்களும் கிராமவாசி ஒருவரும் படுகாயமுற்றனர். தேசிய பாதுகாப்பு படையினரும் அங்கு வந்து சேர்ந்த பிறகு அதிரடி தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது. துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே முன்னேறியதில் சுபாஷ் பதான் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 

8 மணிநேரம் மீட்பு நடவடிக்கை முடிவுக்கு வந்ததோடு 23 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினர் சுபாஷ் பதான் எந்த கோரிக்கையையும் முன் வைக்கவில்லை என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவித்தனர். குழந்தைகளை பத்திரமாக மீட்ட காவல்துறைக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவித்துள்ளது உத்தரபிரதேச மாநில அரசு.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon