பிடிபட்ட அரியவகை திமிங்கலம், மீண்டும் கடலில் விட்ட வைரல் வீடியோ

கேரள மீனவர்கள் சிலர் தங்களது வழக்கில் பிடிபட்ட அரிய வகை திமிங்கல சுறா மீனை மீண்டும் கடலில் விட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. கடலில் உள்ள திமிங்கல சுறாக்கள் 40 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டவை.

 

இந்த வகை சுறா ஒன்று கோழிக்கோடு கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் சிக்கியது. உடலில் வெள்ளை நிற புள்ளிகளுடன் காணப்படும் அந்த மீன் அரிய வகை உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதை மீண்டும் கடலிலேயே மீனவர்கள் விட்டனர்.

 

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இன்ஸ்டன்ட் பிஷ் எனும் குழுவினரால் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை கடந்த 2 நாட்களில் மட்டும் 30 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.


Leave a Reply