விண்வெளி மனிதர்களின் வாகனம் பறந்து சென்றதா?
மெக்சிகோவில் வெடித்து சிதறிய எரிமலை அருகே தென்பட்ட வெளிச்சக் கீற்று விண்வெளி மனிதர்கள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள எரிமலை கடந்த திங்கள் கிழமை வெடித்து சிதறியது.
இதையடுத்து சில நொடிகள் இடைவெளியில் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் நோக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் வெளிச்சக் கீற்று ஒன்று கடந்து சென்றது. இந்த காட்சிகள் அந்த பகுதியில் மெக்சிகோ அரசால் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்தன.
அந்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகின. அதை பார்வையிட்ட பலரும் வெளிச்சத்தை விண்வெளி மனிதர்களின் வாகனம் என்றும் வேறு சிலர் வானத்திலிருந்து விழும் எரிகல் என்றும் கூறிவருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




