ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே எட்டிவயல் கண்மாயில் சீமை கருவேல மரங்கள் அகற்றி மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன் பிரபாகர் தொடங்கி வைத்தார்.
ஊராட்சி தலைவர் எஸ்.கனகசக்தி பாஸ்கரன், அம்மா பேரவை பாஸ்கரன், கிராம நிர்வாக அலுவலக நவநீதன், போகலூர் ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலர் கோவிந்தன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி. சுரேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சி.முருகேசன், செய்யாலூர் ஊராட்சி தலைவர் நவாஸ் கான், முதலூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் சுகுமார், எம்ஜிஆர் மன்ற செயலர் செல்வகுமார், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழர் பூமி இயக்க ஒருங்கிணைப்பாளர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.