--- --:--:-- --

உருளைக்கிழங்கு பயிரிட்டு கோடிகளை குவிக்கும் விவசாயி குடும்பம்

6

குஜராத்தை சேர்ந்த ஒரு விவசாய குடும்பத்தினர் உருளைக்கிழங்கை உற்பத்தி செய்து ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகின்றனர். ஆரவல்லி மாவட்டத்தை சேர்ந்த சித்தேஷ் பட்டேல் குடும்ப உறுப்பினர் 10 பேருடன் இணைந்து லேடி ரோசட்டா என்ற இனத்தை சேர்ந்த உருளைக்கிழங்கை ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டு வருகிறார்.

 

சிப்ஸ் தயாரிக்க பயன்படுவதால் ஐடி‌சி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன . ஒரு கிலோ 17 ரூபாய்க்கு விற்கப்படுவதால் ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக தெரிவித்தார். அவர் பயின்ற வேளாண் அறிவியல் படிப்பு அதற்கு உதவியாக அமைந்துள்ளது.

 

கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சம் டன் லேடி ரோசட்டா உருளைக்கிழங்கு இந்தோனேசியா, ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon