திருச்சியில் களைகட்டிய திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு!!

உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், அக்கட்சி சார்பில் வெற்றி பெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்கும் பிரமாண்ட மாநாடு திருச்சியில் நடைபெறுகிறது.

 

சமீபத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அதிமுகவைவிட திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது.கட்சி அடிப்படையில் மாவட்ட ஊராட்சி வார்டுகள் மற்றும் ஒன்றிய வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்று, மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது.

உள்ளாட்சிஅதிக இடங்களில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையிலும், வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா நடத்தும் வகையிலும் திருச்சியில் திமுக சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருச்சியில் உள்ள கேர் கல்லூரி மைதானத்தில், அம் மாவட்ட திமுக செயலாளரும், சமீபத்தில் கட்சியின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்ட கே.என்.நேரு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்திருந்தார்.

 

அதன்படி, இன்று காலை 9 மணிக்கு மாநாடு தொடங்கியது. இதில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பிரதிநிதிகள் ஏராளமானோர் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக முன்னணி தலைவர்கள் பலரும் சிறப்புரையாற்றுகின்றனர்.


Leave a Reply