நாடாளுமன்ற பட்ஜட் கூட்டத்தொடர் தொடங்கியது : நாளை மத்திய பட்ஜெட் தாக்கல்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. 2020-21 -ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாளை தாக்கல் செய்கிறார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2-வது முறையாக பதவியேற்ற பின், கடந்தாண்டு ஜுலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சராக நிர்மலா சீத்தாராமன் முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பெரும் சலுகைகள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறவில்லை.
இந்நிலையில் 2020-20 21ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். இன்று குடியரசுத் தலைவர் உரை முடிந்தவுடன் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன.
நாளை காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையிலும், உள்நாட்டு மொத்த உற்பத்தியும் கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில், இதற்கான சீர்திருத்தங்கள் தொடர்பாக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும் வரிச்சலுகைகள், கூடுதல் வரி விதிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




