பில்கேட்ஸ் மகளின் நிச்சயதார்த்த அறிவிப்பு

பில்கேட்ஸின் மகள் ஜெனிபர் கேட்ஸ் தனது நிச்சயதார்த்தம் குறித்து அறிவித்து அதற்கு அவரது தந்தை பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா தம்பதியினரின் மகள் ஜெனிபர் கேட்ஸ். குதிரையேற்ற வீரரான நயல்நாசர் என்பவரை காதலித்து வந்தார்.

 

இந்நிலையில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்ய இருப்பதாக ஜெனிஃபர் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டார். அவரது பதிவிற்கு லைக்குகளும் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் தந்தையும் தாயும் மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்கள்.

 

மேலும் இச்செய்தி கேட்டு வியப்படைந்த தாகவும் பில்கேஸ் தெரிவித்துள்ளார். சிகாகோவில் பிறந்து குவைத்தில் வந்தவரான நயல்நாசர் எகிப்து சார்பில் 2020 ஒலிம்பிக்கில் குதிரையேற்ற போட்டியில் பங்கேற்க உள்ளார்.


Leave a Reply