--- --:--:-- --

இஸ்லாமிய பெண்கள் மசூதிக்குள் நுழையலாம்

2

இஸ்லாமிய பெண்கள் மசூதிக்குள் நுழைய அனுமதி உண்டு என முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில், மசூதி ஆகியவற்றுக்கு பெண்களை அனுமதிக்க கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

 

இவ்வழக்கில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இஸ்லாமிய பெண்கள் மசூதிக்குள் நுழைய அனுமதி உண்டு என அதில் கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய கோட்பாட்டின்படி அம்மதத்தை சேர்ந்த பெண்கள் வழிபாட்டுக்காக மசூதிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மசூதி, வீடு என அவர்கள் விரும்பும் இடங்களில் இஸ்லாமிய பெண்கள் வழிபாடு நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மசூதிகள் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தால் நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும் இஸ்லாமிய கோட்பாடுகளின் படி அங்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருவதாகவும், ஒரு குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டு முறைகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon