கருக்கலைப்புக்கான கால அவகாசம் 24 வாரங்களாக நீட்டிப்பு

கருக்கலைப்புக்கான கால அவகாசத்தை 20 வாரங்களில் இருந்து இருபத்தி நான்கு வாரங்களாக நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கருவுற்றோர், முறையற்ற உறவால் கருவுற்று கலைக்க விரும்புவோர், கருவுறும் 18 வயதிற்கு குறைவான பெண்கள், மாற்றுத்திறனாளி மகளிர் ஆகிய சிறப்புப் பிரிவு பெண்களுக்கு இந்த கால நீட்டிப்பு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

 

இதற்கு மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு திருத்த மசோதாவை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது . பாலியல் வன்கொடுமை அல்லது தவறான தொடர்பில் கருவுறும் மைனர் பெண்கள் தாங்கள் கருவுற்றிருப்பதை காலம் கடந்து அறிந்தால் அவர்களுக்கு உதவும் வகையில் கருக்கலைப்புக்கான காலஅவகாசம் நீட்டிப்பு அமையும் என கூறப்பட்டுள்ளது.


Leave a Reply