மரங்களைப் பாதுகாக்க 3500 மாணவர்கள் பங்குபெற்ற விழிப்புணர்வு நிகழ்வு

சேலம் மாவட்டம் நெத்திமேடு பகுதி தனியார் பள்ளி ஒன்றில் சுமார் 3500 மாணவர்கள் இயற்கை சுற்றுச்சூழல் பற்றியும்,மரங்கள் வளர்ப்பது பற்றியும் விழிப்புணர்வு நடத்தினார்.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின் மைதானத்தில் நடந்தது,பச்சை நிற உடை அணிந்து பழங்காலங்களில் மரம் எவ்வாறு இருந்தது என்பதையும்,கருப்பு நிற உடையணிந்து தற்போது மரங்கள் எவ்வாறு இருக்கின்றது என்பது பற்றியும் மிகவும் தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டினார்,இது காண்போர்களை வெகுவிமர்சையாக கவர்ந்தது.

 

தற்போது நிகழ்ந்துவரும் பருவநிலை மாற்றங்களின் காரணமாக அனைவரும் வீட்டிற்கு ஒரு மரம் கட்டாயமாக வளர்க்க வேண்டும் என்றும்,பிறந்தநாளன்று ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஒரு மரம் நட வேண்டும் என்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நடத்தினர்.


Leave a Reply