தனியார் தொழிற்சாலையில் பிடிப்பட்ட 51 விஷப்பாம்புகள்
சேலம் மாவட்டம் பொட்டனேரியில் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட தனியார் தேனிரும்பு தொழிற்சாலை செயல்பட்டுக் கொண்டு வருக்கிறது ,இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.இந்த தொழிற்சாலையில் அதிக அளவு பாம்புகள் சுற்றித்திரிந்து வருகிறது.
இதனால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தொடர்ந்து வந்த புகாரை அடுத்து, இருளர் பாம்பு பிடிக்கும் தொழிற் சங்கத்தின் உதவியுடன் 51 பாம்புகள் பிடிபட்டன.பிடிபட்ட அனைத்து பாம்புகளும் பின்பு வனப்பகுதியில் விடப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




