--- --:--:-- --

ராமேஸ்வரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.23 கோடி

11

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி பர்வத வர்த்தினி அம்பாள், பஞ்சமூர்த்திகள் ஆகிய சன்னதி முன் உள்ள உண்டியல்கள் , கோயிலுக்கு சொந்தமான நம்புகோயில் உள்பட உப கோயில்களின் உண்டியல்கள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டது. கோயில் கல்யாண மண்டபம் கொண்டுவரப்பட்ட காணிக்கை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி உதவி ஆணையர்கள் ஜெயா (ராமேஸ்வரம்), சிவலிங்கம் (பரமக்குடி), மேலாளர் முருகேசன், இணை ஆணையரின் கமலநாதன் பேஷ்கர்கள் அண்ணாதுரை, கண்ணன் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் ரொக்கமாக ரூ.1கோடி 23 லட்சத்து 45 ஆயிரத்து 774, தங்கம் 64 கிராம், வெள்ளி 2.882 கிலோ, வெளி நாட்டு கரன்சி 119 காணிக்கையாக கிடைத்தன.

 

காணிக்கை எண்ணும் பணியில் கோயில் உதவி ஆணையர்கள், கண்காணிப்பாளர்கள், பக்தர்கள் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பள்ளி மாணவியர் பங்கேற்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon