--- --:--:-- --

சேலம்-சென்னை எட்டு வழி சாலை மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு

2

சேலம்-சென்னை எட்டு வழி சாலை உருவாக்கப்பட திட்டமிடப்பட்டது,எட்டு வழி சாலைக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது, இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலத்தை அவர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று எட்டு வழி சாலை திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

 

இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது,இந்த விவகாரத்தில் மனுதாரர் மட்டும் எதிர்மனுதாரர் 2 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேத்து முதலில் பட்டியலிடப்பட்டு பின்பு நீக்கப்பட்டது.

 

இதையடுத்து மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதியிடம் அவரிடம் இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது இந்த வழக்கை விரைந்து முடித்து விடுமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்த கோரிக்கையை அடுத்து குறுக்கிட்ட நீதிபதி,உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உச்சநீதிமன்ற உத்தரவை மாற்றிக்கொள்ள முடியாது என்றும்,மீண்டும் எப்பொழுது பட்டியலிடப்படுகிறதோ அப்பொழுது தான் விசாரிக்கப்படும் என்றும் அக்கோரிக்கையை நிராகரித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon