--- --:--:-- --

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தி.மு.க-வினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம். சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவையில் கைது !!!

6

கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தி.மு.க-வினர் சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கார்த்திக் தலைமையில் காவல்துறையினரின் தடையை மீறி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமையை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், மாநகராட்சியின் ஒதுக்கீடு இடங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை நிறுத்த வேண்டும், மாநகராட்சியின் சுகாதார சீர்கேடு மற்றும் சாலை வசதிகள் மின் விளக்குகள் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாதது உள்ளிட்ட பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து கோவை சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கார்த்திக் தலைமையில் தி.மு.க-வினர் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏற்கனவே இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறையினர் தடை விதித்திருந்த நிலையில் காவல்துறையினரின் இந்த தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவை மாநகராட்சியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 

ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டிக்கும் விதமாக குப்பை கூளங்கள் உடன் காட்சி அளிக்கும் இடங்கள்,குடிநீர் பைப்புகள் போன்றவை அடங்கிய அதற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர்.அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

 

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க- வினர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon