4 வயது சிறுமியிடம் சில்மிஷம்- முதியவர் கைது
நாமக்கல் மாவட்டம் ஏஎஸ் பேட்டையில் 4 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கோவையை சேர்ந்த திருஞானம் என்பவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் திருஞானம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் சிறுமி அழுது உள்ளது.
இதையடுத்து அங்கு வந்த சிறுமியின் பெற்றோரை கண்டு அவர் தப்பி சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து நெஞ்சுவலி என மருத்துவமனையில் சேர்ந்த திருஞானத்திடம் சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




