--- --:--:-- --

யாரேனும் தூக்கிலிடப்படுகிறார் என்றால் அதைவிட அவசர‌ வழக்கு இருக்க முடியாது

2

ஒருவர் தூக்கிலிடப்படுகிறார் என்றால் அந்த வழக்கை விட வேறு அவசரவழக்கு ஏதும் இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்‌ஏ பாப்டே கருத்து தெரிவித்துள்ளார். டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 4 பேர் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.

 

வரும் ஒன்றாம் தேதி அதிகாலை 6 மணிக்கு தூக்கிலிடுமாறு டெல்லி நீதிமன்றத்தால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை கடந்த 17ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துவிட்டார். இதற்கு எதிராக முகேஷ்குமார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 

இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்குமாறு முகேஷ் குமார் சிங் தரப்பு வழக்கறிஞர் தலைமை நீதிபதி எஸ்‌ஏ பாப்டேவிடம் முறையிட்டார். அப்போது வழக்குகளை பட்டியலிடும் அதிகாரியை அணுகுமாறு தலைமை நீதிபதி முகேஷ் குமார் சிங் தரப்பு வழக்கறிஞரிடம் அறிவுறுத்தினார்.

 

மேலும் யாராவது ஒருவர் தூக்கிலிடப்படுகிறார் என்றால் அதைவிட அவசர வழக்கு வேறு ஏதும் இருக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon