சென்னை அடுத்த திருவேற்காட்டில் பட்டா கத்தியால் கேக் வெட்டி திருமண வீட்டில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவர் ஒருவருக்கு கடந்த 26ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட கல்லூரியின் முன்னாள் மற்றும் இன்னாள் மாணவர்கள் சிலர் நீண்ட பட்டாக் கத்தியை கொண்டு கேக் வெட்டியும் அச்சுறுத்தும் விதமாக கத்திகளை காட்டி கூச்சலிட்டும் திருமண விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கும்பலில் இருந்த மோகன் குமார் என்பவர் ரூட்டு தல விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சிக்கியவர் என கூறப்படும் நிலையில் கேக் வெட்டிய விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
நீட்டால் பறிபோன மாணவியின் உயிர்..!
விரிவாக்க பணியின் பொழுது சரிந்து விழுந்த நடைமேடை..!
கனமழை காரணமாக அரசு பள்ளிக்குள் தேங்கிய மழை நீர்..!
திருப்பூரில் அரசு விழாக்களில் ஆளுங்கட்சியினர் அட்ராசிட்டி..! கைத்தடிகளுக்கு கடிவாளம் போடுவாரா எம்.எம...
வீடு புகுந்து சாம்சங் தொழிலாளர்கள் கைது..!
ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!