காவலர் தேர்விலும் முறைகேடு.? வேலூரில் ஒரே மையத்தில்100-க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றது எப்படி..? அதிர்ச்சி தகவல்!!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது அம்பலமான நிலையில் சமீபத்தில் நடந்த காவலர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக ராமநாதபுரம் மாவட் டத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய மையங்களில் தேர்வு எழுதி, முதல் 100 பேர் ரேங்க் பட்டியலில் இடம் பெற்ற 39 பேர் உட்பட 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இடைத்தரகர்களாக செயல்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சிபிசிஐடி போலீசார் மேலும் பலரை சுற்றி வளைத்துள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வி தும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக இப்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 8888 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்வதற்காக காவலர் தேர்வு வாரியம் மூலம் இந்த தேர்வு நடைபெற்றது. 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதினர். இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், டிஎன்பிஎஸ்சி போல இதிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதில்,வேலூர் மாவட்டத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 100-க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற அனைவரும் ஒரு குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் என்பதும் கூடுதல் தகவலாகும். ஏற்கனவே காவல் உதவி ஆய்வாளர் தேர்விலும் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், தற்போது காவலர் தேர்விலும் முறைகேடு என்ற அதிர்ச்சித் தகவலால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




