திருப்பரங்குன்றம் தண்டவாளத்தில் ரயிலை கவிழ்க்க சதி ?

திருப்பரங்குன்றத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் பெரிய சவுக்கு கட்டை கிடந்தது. அப்போது அந்த வழியாக ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.

 

தண்டவாளத்தில் கட்டை கிடந்ததை கண்ட டிரைவர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தி கட்டையை அகற்றி விட்டு சென்றார். இதுதொடர்பாக அவர் மதுரை ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

 

யார்இந்த ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply