கோவை மாவட்டம் துடியலூர் மீனாட்சி கார்டன் பகுதியில் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் செருப்புகளை குறிவைத்து திருடும் சைக்கோ திருடனை சிசிடிவி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சில வீடுகளில் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் செருப்புகள் சில மாதங்களுக்கு முன்பு திருடு போனதாக கூறப்படும் நிலையில் கடந்த 17ஆம் தேதியும் அதேபோல திருட்டு அரங்கேறியுள்ளது.
இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி களை ஆராய்ந்தபோது பெண்களைப்போல நைட்டி அணிந்து வலம் வரும் மர்ம நபர் ஒருவர் ஆளில்லா வீடுகளில் பூட்டை உடைத்து பெண்களின் உள்ளாடைகள் மற்றும் செருப்புகளை மட்டும் குறிவைத்து திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
பீரோவில் நகை மற்றும் பணம் இருந்தும் அவற்றில் கை வைக்காமல் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் குறி வைத்து திருடுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.