--- --:--:-- --

பிரசவ வலியால் துடித்த பெண்ணை 6 கிமீ தூக்கி சென்ற சி‌ஆர்‌பி‌எஃப் வீரர்கள்

13

சத்தீஷ்கர் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் கட்டிலில் வைத்து 6 கிலோமீட்டர் தூரம் தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப் பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் 85 வது பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

 

அப்போது குறிப்பிட்ட கிராமத்தில் கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருப்பதை கண்டனர். அதே கிராமத்தில் அருகே மருத்துவமனையோ அல்லது வாகனங்கள் செல்வதற்கு உரிய சாலை வசதிகள் இல்லாததை அறிந்த பாதுகாப்பு படை வீரர்கள் கர்ப்பிணியை கட்டிலில் அமரவைத்து சுமார் 6 கிலோமீட்டர் தூரம் தூக்கி சென்று அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

மனிதநேயத்துடன் செயல்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon