தேசிய அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை வாழ்த்திய ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி
மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில், ஈட்டி எறிதலில் மூன்றாமிடம் பிடித்த இராமநாதபுரம் மாவட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் மோகன் மகள் ஐஸ்வர்யா (முகமது சதக் தஸ்தகிர் மெட்ரிக்., பள்ளி + 1 மாணவி) இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் வீ.வருண்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஐஸ்வர்யா , கடந்த காலங்களில் நடந்த வட்டெறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் தங்கம் 43, வெள்ளி 14, வெண்கலம் 9 பதக்கங்கள் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





