மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பொய்களை பரப்பி குழப்பங்களை விளைவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாஜக தலைவராக நட்டா தேர்வானதையடுத்து டெல்லியில் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் எதிர்கட்சிகளை மறைமுகமாக சாடினார்.
பாஜகவினர் பொதுமக்களை அடிக்கடி சந்திக்க வேண்டும் என்ற அவர் எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்கொண்ட சவால்களுக்கு மேல் எதிர்காலத்தில் பாஜக அதிக சவால்களை சந்திக்க நேரிடும் என்றார்.
பாஜக எந்த தவறும் செய்யவில்லை என்பதைவிட மக்கள் ஆதரவு உள்ளது என்பதே எதிர்கட்சிகளுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பதாகவும் மோடி கூறினார். பாஜக மீதும், அரசு மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை யாராலும் அசைக்க முடியாது என்று மோடி தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
உலகின் தொன்மையான தமிழ் மொழியிலே என்னால் பேச முடியலேயே - அமித் ஷா
பிப். 15 முதல் சுங்கக் கட்டணம் மாற்றம்..!
தேர்தல் விதிமுறைகளை உடனே அமல்படுத்த வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
பிப். 15 முதல் சுங்கக் கட்டணம் மாற்றம்..!
ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டது..! சேலம் கூட்டத்தில் விஜய் அதிரடி பேச்சு!
அமித்ஷா இன்று தமிழகம் வருகை..!






