ஆளில்லா வீட்டில் திருடிய கொள்ளையர்கள் – சிசிடிவி மூலம் சிக்கினர்

கோவையில் வீட்டிற்குள் நுழைந்து பணம் மற்றும் மின்னணு சாதனங்கள் திருடப்பட்டது குறித்து சிசிடிவி காட்சிகளுடன் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. செட்டி பாளையத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தபோது கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

 

21,000 ரூபாய் ரொக்கம், கேமராக்கள் மற்றும் கணிப்பொறியில் ஹார்ட் டிஸ்கையும் அவர்கள் திருடிச் சென்றுள்ளனர். வீடு திரும்பிய சக்திவேல் திருட்டு குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இரண்டு நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த இருவரில் ஒருவர் முகமூடி அணிந்துள்ளார்.

 

இதுகுறித்து செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்த சக்திவேல் சிசிடிவி காட்சிகளையும் அளித்துள்ளார்.


Leave a Reply