“வழக்கு தொடர்ந்ததால்தான் உள்ளாட்சியில் திமுக வென்றது” – ஸ்டாலின்

ஆண்டுதோறும் அரசு சார்பில் வழங்கப்படும் பெரியார் விருது இந்த ஆண்டு அறிவிக்கப்படாதது குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் பெரியார் விருது அறிவிக்கப்பட்டதுடன் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார்.

 

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கடந்த ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, கம்பர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை கடந்த 13ஆம் தேதி அறிவித்தனர். அதில் பெரியார் விருதுகள் அறிவிக்கப்படாதது குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

 

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கடந்த ஆண்டுக்கு முன் சொந்த கட்சியை சேர்ந்தவர்கள் பெரியார் விருது வழங்கப்பட்டது சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஆண்டில் பெரியார் விருது பெற ஆள் இல்லையா அல்லது டெல்லி எஜமானர்களின் மனம் குளிப்பதற்காக பெரியார் விருது தவிர்க்கப்பட்டுள்ளதா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இந்த நிலையில் முதலில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் தேதி வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழ் வளர்ச்சி துறை வெளியிட்ட அறிக்கையில் பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கும் அம்பேத்கர் விருது முனைவர் அர்ஜுனனுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ள 35 பிரிவுகளுடன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அறிவித்திருக்கும் பெரியார், அம்பேத்கர் விருதுகளையும் முதலமைச்சர் வருகிற 20-ஆம் தேதி வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Leave a Reply