வேலூர் தேர்தலப்போ மட்டும் காங்., தேவைபட்டதோ?துரைமுருகனுக்கு கார்த்தி சிதம்பரம் சுளீர் கேள்வி

திமுக – காங்., இடையேயான மோதல் வலுத்து விட்டது. காங்கிரஸ் போனால் போகட்டும் ; எங்களுக்கு நட்டம் இல்லை என துரைமுருகன் கூறியதற்கு பதிலடியாக இந்த ஞானம் வேலூர் தேர்தலப்போ எங்கே போனது என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுகவுக்கு எதிராக தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கை பூதாகரமாகிவிட்டது. திமுக-காங்., கூட்டணி பணால் ஆவதும் உறுதியாகிவிட்டது போல் இரு கட்சித் தலைவர்களிடையே வார்த்தைப் போர் தொடங்கி விட்டது.

சோனியா காந்தி ஏற்பாடு செய்த எதிர்க் கட்சிகளின் கூட்டத்தை திமுக புறக்கணித்ததற்கு கே.எஸ்.அழகிரியின் அறிக்கை தான் காரணம் எனக் கூறிய அக்கட்சியின் மூத்த தலைவர் டி.ஆர்.பாலு, இனி காங். உடன் கூட்டணி தொடருமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும் என செக் வைத்தார்.

 

இந்நிலையில் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் இன்று ஒரு படி மேலே போய், காங்கிரஸ் போனால் போகட்டும்; ஓட்டே இல்லாத காங்கிரஸ் வெளியேறினால் எங்களுக்கு நட்டம் இல்லை.

 

டி.ஆர்.பாலு கூறியது போல் காலம் என்ன பதில் சொல்வது? நான் சொல்லும் பதில் இது தான் எனக் கூறி காங்கிரசை ஒரேயடியாக மட்டம் தட்டி இன்று பேட்டி அளித்தார்.

துரைமுருகனின் இந்தக் கருத்துக்கு, காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுக்கும் விதமாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

அதில், இந்த ஞானம் வேலூர் மக்களவைக்கு இடைத்தேர்தல் நடப்பதற்கு முன்னர் எங்கே போனது? என்று பதிவிட்டு, வேலூரில் உங்கள் மகன் வெற்றி பெற மட்டும் காங்கிரஸ் தயவு தேவைப்பட்டதோ? என்ற ரீதியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இப்படிதிமுக, காங்கிரசார் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளதால் கூட்டணி முறிவது உறுதி என்றே தெரிகிறது.


Leave a Reply