--- --:--:-- --

நாடு முழுவதும் பாஸ்டேக் முறை இன்று முதல் கட்டாயம்

3

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சரக்கு வாகனங்களின் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

 

இதை தவிர்க்கவும் கட்டண வசூலில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஃபாஸ்ட்டேக் எனப்படும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஃபாஸ்ட் டேக் கட்டண வசூல் மூலம் ஜனவரி 15-ம் தேதியிலிருந்து கட்டாயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 

அதன்படி இன்று முதல் அனைத்து சுங்க சாவடிகளிலும் ஃபாஸ்ட் டேக் முறை அமலுக்கு வருகிறது. கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் அனைத்து சுங்க சாவடிகளிலும் ஒரு வழித்தடத்தை பணபரிவர்த்தனை மூலம் சுங்கச்சாவடிகளை கடக்க அனுமதி அளிக்கப்பட்டு மற்ற வழி தடங்களில் ஃபாஸ்ட் டேக் பயன்படுத்தும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

 

இதனால் பெரும்பாலானோர் ஃபாஸ்ட் டேக் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்நிலையில் இன்று முதல் பாஸ்டர் முறை கட்டாயமாக்கப்படுவதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது. பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் சிக்னல் கோளாறு உள்ளதாகவும் இதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதனிடையே நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ஃபாஸ்ட் டேக் விற்பனை செய்யப்படுவதாகவும், மின்னணு முறையில் 52 கோடி ரூபாய்க்கு சுங்கச்சாவடிகளில் பண பரிவர்த்தனை நடைபெறுவதாகவும் மத்திய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon