பேருந்தின் மேற்கூரையில் ஆபத்தான முறையில் பயணித்த கல்லூரி மாணவர்கள்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரசு பேருந்தின் மேல் கூரை மீது கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வது காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 

செய்யாறில் இயங்கிவரும் அரசு கலைக் கல்லூரிக்கு ஆரணி, களம்பூர், ஆதனூர், புதுப்பாளையம், குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவ, மாணவியர் வருகிறார்கள்.

 

இந்நிலையில் ஆரணியில் இருந்து செய்யாறு செல்லும் அரசு பேருந்தின் மேற்கூரை, படி மற்றும் பின் பக்க ஏணியின் மீது மாணவர்கள் தினமும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கிறார்கள். மாணவர்களின் இந்த செயல் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.


Leave a Reply