உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்! – இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

இளைஞர்கள் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி நாடெங்கும் நேற்று தேசிய இளைஞர் தினம் அனுசரிக்கப்பட்டது.

 

இதனையொட்டி இளைஞர்களுக்கான ஐந்து நாள் தேசிய கருத்தரங்கம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தொடங்கியுள்ளது. காணொலி முறையில் இந்த கருத்தரங்கை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். அப்போது பேசிய அவர் எதையும் தங்களால் சாதிக்க முடியும் என்று இளைஞர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டுமென்றும், அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இளைஞர்கள் உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். முன்னதாக கொல்கத்தா துறைமுகத்தில் 150ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

 

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கொல்கத்தா துறைமுகத்திற்கு அகில இந்திய பாரத இந்து சபை முன்னாள் தலைவர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் பெயரை பிரதமர் சூட்டினர்.


Leave a Reply