--- --:--:-- --

மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் பொய்வழக்கில் கைது- முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர்அலி காவல்துறைக்கு கண்டனம்…

13

மூத்த பத்திரிகையாளரும் மக்கள் செய்தி மையம் என்ற பதிப்பகத்தை நடத்தி வருபவருமான வி அன்பழகன் சென்னை புத்தகக் காட்சியில் அவரது பதிப்பகத்தின் அரங்கை உரிய பணம் செலுத்தி அமைத்திருந்தார். தமிழக அரசின் ஊழல்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில்நூல்களாக வெளிட்டும் வருகிறார் வி.அன்பழகன்.

 

நேற்றைய தினம் (11-01-2020) மக்கள் செய்தி மைய அரங்கை மூடச்சொல்லி புத்தக காட்சியை நடத்தும் பபாசி அமைப்பினர் நெருக்கடி கொடுத்துள்ளனர். தமிழக அரசுக்கு எதிரான புத்தகங்கள் மக்கள் செய்தி மைய அரங்கில் விற்கப்படுவதே காரணம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த காரணத்தை எழுத்துப் பூர்வமாக கேட்டிருக்கிறார் அன்பழகன்.

 

கடிதமாக கொடுத்தவுடன் நேற்றைய தினமேஅரங்கை காலி செய்திருக்கிறார். புத்தகக் காட்சியில் அரசின் அழுத்தங்கள் காரணமாக கருத்துச் சுதந்திரத்தை மிரட்டிய பபாசியின் செயலை கண்டிக்கத்தக்கது. இதைத் தொடர்ந்து பபாசியினருக்கு பத்திரிகையாளர் அன்பழகன் கொலை மிரட்டல் விடுத்ததாக பபாசி நிர்வாகிகள் மூலமாகப்பொய்ப்புகார் ஒன்றைப் பெற்றுள்ளது சென்னை மாநகர காவல்துறை.

 

இப்படிப் பெறப்பட்ட பொய்ப்புகாரில் ஜாமினில் வரமுடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்த காவல்துறை இன்று (12-01-2020) அதிகாலை ஐந்து மணியளவில் அன்பழகனை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்திருக்கிறது. இந்த பொய்வழக்கும் , கைது சம்பமும் அப்பட்டமான அத்துமீறல் – தமிழக அரசின் ஊழல்களை புத்தகமாக வெளியிட்டதற்காக காவல்துறை கைது செய்வது கருத்து சுதந்திரத்திற்கும் பத்திரிகை சுதந்திரத்திற்கும் விடப்பட்ட சவால். கருத்து சுதந்திரம் மீது நம்பிக்கை கொண்டோர் அனைவரும் கண்டிக்க வேண்டியது அவசியம் .

 

ஏற்கனவே பத்திதிகையாளர் அன்பழகன் மீது பல பொய்வழக்குகள் போடப்பட்டதும் குண்டர் சட்டம் ஏவப்பட்டதும் , நீதிமன்றத்தில் அந்த வழக்குகள் எதிர்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. பொய் வழக்குகள் புனைந்தவர்கள் நீதியின் முன் நிச்சயமாக நின்றாக வேண்டும். கைதுச் செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் அன்பழகன் உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டும் என கூறினார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon