ராமநாதபுரம் அருகே காவலர் மீது தாக்குதல் நடத்தி கைதானவர் காவலர்களிடம் அனைவரும் நண்பர்களாக பழகி மரியாதை செலுத்துங்கள் என பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். உச்சிப்புளி பேருந்து நிலையம் அருகே மது போதையில் தகராறில் ஈடுபட்ட 2 பேரிடம் சார்பு உதவி ஆய்வாளர்கள் விசாரணை நடத்த சென்றபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
போதையில் இருந்த நபர்கள் காவலர்கள் மீது கற்களை கொண்டு தாக்கியதோடு காவலர்களின் இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து காயமடைந்த காவலர்கள் ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இச்சம்பவம் தொடர்பாக கணேசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள கணேசன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது செயலுக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.