குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக டெல்லியில் இன்று ஆலோசிக்கும் எதிர்க்கட்சிகள்!

குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்க இருக்கின்றனர்.

 

இதில் குடியுரிமை திருத்த சட்டம் தேசிய மக்கள் பதிவேடு முறைக்கு எதிராக கூட்டு எதிர்ப்பு செயல் திட்டத்தை வகுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. எனினும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த கூட்டத்தில் பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை தங்கள் கட்சி தணித்தே எதிர்க்கும் என்றும் அவர் கூறியிருந்தார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.


Leave a Reply