தமிழகத்தில் ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டாலும் அடுத்த நொடியே பதவியை வீசிவிட்டு போராட தயார் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சூளுரை !!!

தமிழகத்தில் ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டாலும் அடுத்த நொடியே பதவியை வீசிவிட்டு உங்களோடு இணைந்து போராட தயாராக இருக்கின்றேன். குடியுரிமை சட்டம் முஸ்லீம்களுக்கு எதிரானது என ஒருகூட்டம் கூறிக்கொண்டு உங்களை அவர்களின் சுய நலத்திற்காக போராட தூண்டுகிறார்கள் என கோவையில் நடந்த பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழாவில் தமிழக உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சூளுரைத்தார்.

 

கோவை கரும்புக்கடை பகுதியில் பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ரூ1000/- வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது,அவர் இரண்டு நாட்களுக்கு முன் தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து பேசினார்கள். அப்பொழுது,முதல்வர் அவர்களிடம் தெளிவாக கூறியுள்ளார்.ஒரு இஸ்லாமியர் கூட பாதிக்கப்பட விடமாட்டோம். அம்மாவின் அரசு எப்பொழுதும் சிறுபான்மை மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்துள்ளார்.இந்த சந்திப்பின்போது. சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி, ஜவாஹிருல்லா உட்பட பலரும் இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

 

முன்னதாக மேடையில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் பஷிர் அமைச்சருக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டனர். மேலும் பேசும்போது, தமிழகத்தில் ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டாலும் எனக்கு இந்த பதவியொன்றும் பெரிதல்ல.அதை வீசிவிட்டு உங்களில் ஒருவனாக முன்னின்று குரல் கொடுப்பேன். இன்று ஒற்றுமையாக வாழும் நம்மிடையே தி.மு.க மதத்தின் பேரில் பிரிவினையை தூண்ட முயற்சிக்கிறது. ஒருபோதும் நாம் அதில் விழுந்துவிடக்கூடாது. உங்களுடன் நானிருக்கின்றேன். உங்களுக்கு ஒருபாதிப்பும் குடியுரிமை சட்டத்தால் ஏற்படாது எனமக்களிடையே அமைச்சர் வேலுமணி உறுதிபட தெரிவித்தார்.


Leave a Reply