எங்களை கொலை செய்து விடுவதாக அப்பா மிரட்டுகிறார்

தூத்துக்குடி மாவட்டத்தில் தந்தை சுபாஷ் பண்ணையார் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னையும், தாயையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக வந்த வீடியோவை அடுத்து காவல்துறையினர் சுபாஷ் பண்ணையார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

தந்தையே எங்களை கொலை செய்ய பார்ப்பதாக மகள் வெளியிட்டுள்ள வீடியோ தான் இது. சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி வைரல் ஆனதால் காவல்துறையினர் சுபாஷ் பண்ணையார் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுக்க என்ன காரணம்? அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் வெங்கடேச பண்ணையார் மறைவிற்குப் பிறகு அந்த அமைப்பை அவரது தம்பி சுபாஷ் பண்ணையார் கவனித்து வருகிறார்.பணங்காட்டுப்படை என்ற அமைப்பை ராஜாவுடன் இணைந்து 2 வருடங்களுக்கு முன்பு தொடங்கியுள்ளார்.

 

இந்நிலையில் தான் சுபாஷ் பண்ணையாரின் மகள் பேசுவது போன்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவில் பேசும் சிறுமி தனது தந்தைக்கும் வேறு பெண்ணுக்கும் கடந்த 7 வருடங்களாக தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் சுபாஷ் பண்ணையாரும் அந்தப் பெண்ணும் நெருக்கமாக இருக்கும் படங்களை ஒரு சிலர் தங்களுக்கு அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.

 

தேவையில்லாத மிரட்டல் போன்கால்கள் வருவதாக தெரிவிக்கும் மாணவி இது தொடர்பாக தந்தை சுபாஷ் பண்ணையாரிடம் கேட்டதற்கு என் தாய், தம்பி, என்னையும் கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும்
அதில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று வீடியோவில் சொல்லப்பட்டிருந்தது.

 

வீடியோ விவகாரம் தொடர்பாக விசாரணையை தொடங்கிய ஆறுமுகநேரி காவல்துறையினர் சுபாஷ் பண்ணையார் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தந்தையை கொலை மிரட்டல் விடுப்பதாக மகளே வீடியோ வெளியிட்ட விவகாரம் தூத்துக்குடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply