பரிசுக் காரை நிறுத்த எங்கள் வீட்டில் இடமில்லை – மாடுபிடி வீரர்

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கி தனது பறைசாற்றும் கலைஞர்களின் வறுமைநிலை சொல்லிமாலாது. மதுரையை சேர்ந்த காளை படை வீரர் தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை விற்று காலை வாங்கி வளர்த்து வருகிறார்.

 

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பார்வையாளர்களின் கைதட்டலுக்கு நடுவே மாடுபிடி வீரர்கள் பரிசு மழையில் நனைவர். ஆனால் அந்த பரிசை அனுபவிக்காமல் அப்படியே விட்டுவிட்டு அடுத்த கட்டத்தை தயாராகும் நிலையிலேயே அவர்களின் சூழல் இருக்கிறது. கடந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை அடக்கி காரை முதல் பரிசாக பெற்றார் ராம்குமார்.

 

அதனை விற்றுவிட்டு இரண்டு காளைகளை வாங்கி வளர்த்து வருகிறார். சின்ன சின்ன பரிசுகளை அடுக்கி வைக்கவே வீட்டில் இடமில்லை. இதில் காரை எங்கே நிறுத்துவது என கேட்கிறார் ராம்குமாரின் தாய் சுந்தரி. கூலி வேலையில் ராம்குமாருக்கு மாதந்தோறும் கிடைக்கும் 7000 ரூபாய் காளை பராமரிப்புக்கு சென்றுவிடுகிறது.

 

இருப்பினும் காருக்கு எரிபொருள் ஊற்றி புகையாக வீணாக வதற்கு பதில் காளைகளுக்கு செலவழித்து பாரம்பரியத்தை காப்பாற்றலாம் என சிரித்துக்கொண்டே சொல்கிறார் ராம்குமார்.


Leave a Reply