கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பிளக்ஸ் பேனர் விழுந்து என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தடையை மீறி பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பிளக்ஸ் பேனர் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தடையை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகிறதா? என போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் மாநகரம் பி.என் ரோடு பூலுவப்பட்டியிலிருந்து நெருபெரிச்சல் செல்லும் சாலையில் சின்னபுதூர் தனியார் பள்ளி அருகில் மெயின் ரோட்டில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது .
இதனால் இந்த ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் எப்பொழுது பிளக்ஸ் போர்டுகள் ரோட்டில் விழுந்து விடும் என்ற அச்சத்தில் செல்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகமும் காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.