கவுன்சிலர்கள் கடத்தலால் சட்டம் ஒழுங்கு பிரச்னை..! திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல் திடீர் ரத்து!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுகத் தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திமுகவும், அதிமுகவும் சுயேட்சை மற்றும் அமமுக கவுன்சிலர்களை கடத்த முயற்சிப்பதாக எழுந்த புகாரையடுத்து தேர்தல் ரத்தாகியுள்ளது.

 

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 17 வார்டுகளில் திமுக கூட்டணி 8 லும், அதிமுக 3 , அமமுக 4, சுயேட்சைகள் இருவர் வெற்றி பெற்றனர். இதில் அதிமுக, திமுக கட்சிகளுக்கு மெஜாரிட்டி இல்லாததால் அமமுக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களுக்கு இரு கட்சிகளுமே வலை வீசின. இதில் அடிதடி, மோதல் சம்பவங்களும் அரங்கேறி சில நாட்களாக களேபரமாகி உள்ளது.

 

இந்நிலையில் இன்று ஒன்றியக் குழு தலைவருக்கான மறைமுகத் தேர்தலிலும் வன்முறை வெடிக்கலாம் என தகவல் வெளியானது. இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்னையை காரணமாக காட்டி, தேர்தலை ரத்து செய்வதாக மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார்.


Leave a Reply