செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். மடக்கோயில் பகுதியை சேர்ந்தவர் பெண்டு குமார் என்கிற குமார், இவரது நண்பர் சிவகுமார். மது பழக்கம் கொண்ட இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குமாரை சரமாரியாக வயிற்றில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் சிவக்குமாரை தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் சீட்டுக் கட்டுகள் சிதறிக் கிடந்ததால் மதுபோதையில் சீட்டாட்ட தகராறு ஏற்பட்டு கொலை நடந்ததா என விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகள் :
நீட்டால் பறிபோன மாணவியின் உயிர்..!
விரிவாக்க பணியின் பொழுது சரிந்து விழுந்த நடைமேடை..!
கனமழை காரணமாக அரசு பள்ளிக்குள் தேங்கிய மழை நீர்..!
திருப்பூரில் அரசு விழாக்களில் ஆளுங்கட்சியினர் அட்ராசிட்டி..! கைத்தடிகளுக்கு கடிவாளம் போடுவாரா எம்.எம...
வீடு புகுந்து சாம்சங் தொழிலாளர்கள் கைது..!
ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!