இராமநாதபுரம் மாவட்டத்தில் “ஒன்றியக்குழு தலைவா்” பதவிக்கு திமுக சார்பில், போட்டியிடுவோர் பெயர் பட்டியல் வெளியீடு

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 10 ஒன்றியங்களில் சேர்மன் பதவிக்கு திமுக., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் தி மு க சார்பில் ஒன்றிய சேர்மன் பதவிக்கு மாவட்ட தலைமையிலான அறிவிப்பு
ராமநாதபுரம்-7 வது வார்டில் வென்ற மனோகரன். மண்டபம்- 2 வது வார்டில் வெற்றி பெற்ற சுப்பு லட்சுமி ஜீவானந்தம்.
திருவாடானை-12 வது வார்டில் வென்ற முகமது முக்தார். ஆர்எஸ் மங்கலம்- 12 வது வார்டில் வென்ற ராதிகா.

 

நயினார் கோவில்- 1 வது வார்டில் வெற்றி பெற்ற இளவரசி மணிமன்னன். போகலூர்-2 வது வார்டில் வென்ற சத்யா.
பரமக்குடி-2 வது வார்டில் வென்ற கலைச்செல்வி கிருஷ்ணன். கமுதி- 5 வது வார்டில் வென்ற தமிழ் செல்வி போஸ். கடலாடி்-12 வது வார்டில் வென்ற பார்வதி ஜெயபாலன் ஆகியோரை திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வெளியிட்டுள்ளார்.

 

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் 1, 5, 6, 7, 13, 14, 15 உள்ளிட்ட வாா்டுகள் சுயேட்சை வசம் உள்ளது. 4, 10, 11, 12 வாா்டுகளை அதிமுக கைப்பற்றியுள்ளது. 2, 3, 8, 9 உள்ளிட்ட வாா்டுகளில் வெற்றி பெற்ற திமுகவிற்கு பெரும்பான்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply