ஈரான், ஈராக்குக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்..! மத்திய அரசு அறிவுரை!! பயணிகள் விமானங்கள் பறக்கவும் தடை!!

அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் நிலவிவரும் நிலையில், ஈரான், ஈராக் நாடுகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்திய பயணிகள் விமானமும் அந்த இரு நாடுகளின் வான் எல்லையும் பறப்பதை தவிர்க்குமாறும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

ஈரான் நாட்டின் ராணுவ தளபதியை அமெரிக்க ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தி கொன்றதையடுத்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் மூளும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தனது நாட்டின் தளபதி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளின் மீது ஈரான் ராணுவம் இன்று காலை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

 

இதில் 30க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா எந்த நேரத்திலும் அதிரடி தாக்குதல் நடத்தலாம் என்பதால் ஈரான், ஈராக் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில் இந்தியர்கள் யாரும் இந்த இரு நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்திய நாட்டின் பயணிகள் விமானங்களும் இந்த இரு நாடுகளின் வான் வழியாக பறக்க வேண்டாம் என மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply