முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் எம்எல்ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி திடீர் சந்திப்பு!!

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சுயேட்சை எம்எல்ஏக்களான நடிகர் கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் திடீரென சந்தித்துப் பேசினர்.

 

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

 

மனிதநேய ஜனநாயக கட்சியின் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, மற்றும் நடிகர் கருணாஸ் எம்எல்ஏ ஆகியோரும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் இன்று காலை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் திடீரென சந்தித்தனர். குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் முதல்வரை சந்திக்க விரும்புவதாகவும், எனவே அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிய முதல்வரிடம் இருவரும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.


Leave a Reply