தேனியில் கொட்டப்பட்டு எரிக்கப்படும் கேரள கழிவுகள்

தேனி புறவழிச்சாலை அருகே உள்ள வனப்பகுதியில் கேரள கழிவுகளை கொட்டி தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

காலாவதியான மருத்துவ மற்றும் இறைச்சி கழிவுகளை கேரளத்தில் இருந்து தேனி மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் கொட்டி செல்வது கடந்த சில வருடங்களாக தொடர்கதையாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வால் கரடு வனப்பகுதிக்குள் கேரள கழிவுகளை கொட்டி தீ வைத்துள்ளனர்.

 

தீ வைப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிப்பதோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே கழிவுகளை கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply