--- --:--:-- --

குஜராத்தில் மகாத்மா காந்தி சிலை உடைப்பு!

1

குஜராத்தில் மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஹரிகிருஷ்ணா ஏரிக்கரையில் சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி சௌஜிபாய் என்பவரின் அறக்கட்டளை சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சிலை ஒன்று நிறுவப்பட்டது.

 

இச்சிலையை நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து விட்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

 

ஏரி கட்டப்பட்டதை பிடிக்காதவர்கள் சிலையை உடைத்தார்களா அல்லது சமூக விரோதிகள் யாரேனும் இதன் பின்னணியில் உள்ளார்களா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon