--- --:--:-- --

சிறார்களின் ஆபாச படங்களை முகநூலில் பதிவிட்ட தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து ஓட்டுநர்: போக்சோ சட்டத்தில் கைது !!!

ad4b5c9b-003c-40b7-949c-c1e33429446b

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் வாலிபர் சிறார்களின் ஆபாச படங்களை முகநூலில் பதிவிட்டது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

 

கோவை மாவட்டம் சமூக ஊடகப்பிரிவில் சமூக வலைத்தளங்களை கண்காணித்த பொழுது சத்தியமூர்த்தி என்ற நபர் தனது முகநூல் பக்கத்தில் சிறார்களின் ஆபாசப்படங்களை பதிவிட்டிருந்ததாகவும்,இந்த படங்களை சூலூரில் இருந்து பதிவேற்றம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

பின்னர்,இதுகுறித்து சமூக ஊடகப்பிரிவில் இருந்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு சூலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஓட்டுநராக பணிபுரிந்து சத்தியமூர்த்தி என்பவனை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.மேலும்,அவன் பயன்படுத்தி வந்த செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்ட பொழுது சிறார்களின் ஆபாசப்படங்கள் உட்பட பல ஆபாசப்படங்களை. இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் தனது சொந்த ஊர் அவினாசி அருகே உள்ள போதம்பாளையம் எனவும், தனது தந்தை பெயர் ராமசாமி எனவும்,கடந்த இரண்டாண்டுகளாக அந்த கல்லூரியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளான்.மேலும்,தனக்கு ஆபாச படம் பார்க்கும் இருந்து வந்ததாகவும்,தான் பார்க்கும் படங்களை மற்றவர்களும் பார்க்க தனது முகநூலில் பதிவிட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளான்.இதனையடுத்து அவனை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

மேலும்,இதுபோன்ற குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைத்திருப்போர் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும்,விரைவில் அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

நேற்று பொள்ளாச்சியில் தனியார் டைல்ஸ் விற்கும் கடையில் தங்கி பணிபுரிந்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் சிறார்களின் ஆபாச படங்களை முகநூலில் பதிவிட்டது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு தனியார் கல்லூரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon