ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி

ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . ராணிப்பேட்டை மாவட்டம் சோலகரை அடுத்த மாலை மேடு கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 2 பேரும், மாணவர் ஒருவரும் ஏரிக்கு துவைக்க சென்றுள்ளனர்.

 

அப்போது ஏழு வயதான மாணவர் தமிழரசன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் சிறுவனை காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது அவர்களும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Leave a Reply