நீட் விண்ணப்பம்! இன்றுடன் நிறைவு!
நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. நீட் தேர்வுக்கான விண்ணப்ப அவகாசம் இன்று நள்ளிரவு 11.50 மணியுடன் முடிகிறது.
நாளையுடன் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் முடிவடைய உள்ளது. விண்ணப்பித்ததில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை ஜனவரி 15 முதல் 31ஆம் தேதி வரை திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். மே 3ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டு ஜூன் 4ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகளை தவிர்ப்பதற்காக இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று, கட்டை விரல் ரேகை ஆகியவற்றையும் பதிவேற்றம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. எய்ம்ஸ், ஜிப்மர் கல்லூரிகளில் சேர தனி நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டு வரை நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு மூலமே அந்த கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




